|
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, ... நான்... அவரை(தேற்ரரவாளனை)உங்களிடத்திற்கு அனுப்புவேன்.(யோவான் 16:7) என்று வாக்குக் கொடுத்திருக்கிறார். அப்போஸ்தலர்கள் ஆவியானவரால் நிரப்பப்பட்டபோது, வல்லமையை பெற்றுக்கொண்டார்கள்! புதிய வரங்களைப் பெற்றுக் கொண்டார்கள்! அவர்களுடைய வாழ்க்கை, முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கையாக, அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்கிற வாழ்க்கையாக மாறினது. பயந்துபோய் அறையைப் பூட்டிக் கொண்டிருந்த சீஷர்கள், தைரியமாய் இயேசு கிறிஸ்துவைக் குறித்து சாட்சி பகிர்ந்தார்கள். ஏராளமான மக்கள் மனந்திரும்பி, திருச்சபையில் சேர்க்கப்பட்டார்கள்.
உங்கள் வாழ்க்கையும் வல்லமையுள்ள ஒரு வாழ்க்கையாக மாற வேண்டுமா? சாட்சியுள்ள ஒரு வாழ்க்கையாக மாற வேண்டுமா?. சோதனையின் மேல் வெற்றியுள்ள ஒரு வாழ்க்கையாக மாற வேண்டுமா? இச்செய்தியைக் கேளுங்கள், ஆண்டவர் எல்லா ஆசீர்வாதங்களையும் உங்களுக்கு நிச்சயம் தருவார்!
|